search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் டவுண்"

    • நாகர்கோவில் டவுண் வழியாக இயக்க எதிர்ப்பு
    • ரெயில்வே மந்திரிக்கு கடிதம்

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில், நெல்லை வழியாக சென்னைக்கு குருவாயூர் ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோல் மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.


    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் என்ஜின் மாற்றுவதற்கு சுமார் 40 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்கள் வரை ஆகும்.எனவே இந்த ரெயிலை நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வராமல் பைபாஸ் வழியாக அதாவது நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதனால் 40 நிமிடங்கள் வரை பயண நேரம் மிச்ச மாகும் என்றும் தெரிவி க்கப்பட்டுள்ளது. அதன்படி அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம்போல்இரவு 8.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். ஆனால் காலை 9 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வருவதற்குப் பதிலாக இனி 8.05 மணிக்கு நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

    தொடர்ந்து காலை 10.35 மணிக்கு திருவனந்தபுரம் செல்வதற்கு பதிலாக 9.30 மணிக்கே திருவனந்தபுரம் சென்று 9.35 மணிக்கு அங்கிருந்து புறப்படும். பகல் 12.10 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    இதே போல் மறுமார்க்க த்தில் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு மாலை 3 மணிக்கு பதிலாக 3.40 மணிக்கு புறப்படும். பின்னர் 6.10 மணிக்கு நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும். இந்த ரெயில் தற்போது 5.45 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு நிலையத்திற்கு வந்து 5.55 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறது.

    ரெயில்வே வாரியம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ள நிலையில் விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ கால அட்டவணை அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பி னரும் கடும் எதிர்ப்பு தெரி வித்து உள்ளனர்.ரெயில் பயணிகள் சங்கத்தினர் வழக்கம் வழக்கம்போல் இந்த ரயில் இயக்க வேண்டும் இந்த ரயிலை டவுண் ரெயில் நிலையம் வழியாக இயக்குவதால் சுற்றுலா பயணிகள், பாதிக்கப்படக் கூடிய சூழல் ஏற்படும் என்று கூறி உள்ளனர்.

    இதேபோல் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ரெயில்வே மந்திரிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் சந்திப்புக்கு வராமல் நாகர்கோவில் டவுணுக்கு செல்வதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை வழக்கம்போல் நாகர்கோவில் சந்திப்பு நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறுகையில், கேரள ரெயில்வே கோட்டத் துடன் குமரி மாவட்டம் உள்ளதால் நமது மாவட்டட மக்களை புறக்கணிக்கிறார் கள். குமரி மாவட்டத்தை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் புதிய கோட்டம் உருவாக்க வேண்டும். 40 நிமிடம் முன் கூட்டி செல்கிறது என்பதற் காக ஆயிரக்கணக்கான மக்களின் ரெயில் பயண பயன்பாட்டை தடுத்து நிறுத்தக்கூடாது. வழக்கம்போல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், மேயரு மான மகேஷ கூறுகையில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுண் ரெயில் நிலையம் வழியாக இயக்க ப்படும் என்ற அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும். இல்லா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    ×